search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர் பிணம்"

    வெம்பாக்கம் அருகே உடலில் ரத்தக்காயங்களுடனும் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வெம்பாக்கம்:

    வெம்பாக்கம் அடுத்த தூசி 3 கண் பாலம் அருகில் இன்று காலை முகத்தில் பலத்த காயங்களுடனும், உடலில் ரத்தக்காயங்களுடனும் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் பிணம் கிடந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

    கிராம நிர்வாக அலுவலர் இளங்கோ மற்றும் உதவியாளர் சேகர் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் தூசி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குப்பதிந்து அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்தாரா? அல்லது அடித்துக் கொல்லப்பட்டு பிணம் வீசப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் இன்று முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மார்த்தாண்டம்:

    மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் இன்று காலை ஒரு கடை முன்பு முதியவர் ஒருவர் படுத்து கிடந்தார். அவர் நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. இதனால் கடையின் உரிமையாளர் அவர் அருகில் சென்று எழுப்பினார். ஆனால் அந்த நபர் அசைவற்று கிடந்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் இது பற்றி மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று பார்த்த போது அந்த நபர் இறந்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரித்தனர். இதில்  இறந்து கிடந்த முதியவர் அருகே ஒரு பை இருந்தது. அதில் இருந்த துண்டு சீட்டில் கணபதி ஆசாரி, காப்புக்காடு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் குளத்தில் முதியவர் பிணமாக மிதந்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூரில் பிரசித்தி பெற்ற திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது. இக் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    நேற்று இரவு பக்தர்கள் தரிசனத்துக்கு பிறகு கோவில் பூட்டப்பட்டது. கோவில் காவலாளி காவல் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

    கோவில் குளத்தை காவலாளி சுற்றி வந்து பார்த்த போது குளத்தில் முதியவர் ஒருவர் பிணமாக மிதப்பதை கண்டார். உடனே இது பற்றி வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர் காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் குளத்தில் பிணமாக மிதந்த முதியவர் வில்லியனூர் புதுநகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்த ஜெயராமன் (வயது 80), தச்சுத்தொழிலாளி என்பது தெரியவந்தது. அவர், குளத்தில் கால் கழுவ சென்றபோது, தண்ணீரில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து வில்லியனூர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், போலீஸ்காரர் சிவக்குமார் ஆகியோர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோட்டைப்பட்டினம் கடற்கரையில் முதியவர் பிணமாக கிடந்தார். அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோட்டைப்பட்டினம்:

    புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளம் அருகே கடற்கரையில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து பிணமாக கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதி பொதுக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக கடலோர காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கடலோர காவல் குழும சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி தலைமையிலான போலீசார் மற்றும் கிராமநிர்வாக அதிகாரி சண்முகம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து முதியவரின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அவர் யார்? என விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் விசாரணையில், இறந்து கிடந்த முதியவர் புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே உள்ள ஓனாங்குடியை சேர்ந்த கணேசன்(வயது 73) என்றும், அவர் கோட்டைப்பட்டினம் தர்காவிற்கு வந்தவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் இது குறித்து அவர் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீசார் கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் கடலில் குளிக்கும்போது மூழ்கி இறந்தாரா? அல்லது வேறெதுவும் காரணமாக என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    முதியவர் ஒருவர் கடற்கரையில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    ×